கோழியா முட்டையா?


கோழியிலிருந்து முட்டை வந்ததா...? முட்டையிலிருந்து கோழி வந்ததா...?
இந்த கேள்வி பல்லாண்டுகளாக நமது மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.

நகைச்சுவை 1:

ஆசிரியர்: கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?

மாணவன்: கோழியிலிருந்து தான் முட்டை வரும், முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுதான் வரும்!

நகைச்சுவை 2:

நபர் 1: கோழியினால்தான் முட்டை வந்தது, முட்டையால் கோழி வரவில்லை.

நபர் 2: அது எப்படி அவ்ளோ சரியா சொல்றீங்க?

நபர் 1: ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை!

இந்த நகைச்சுவைகள் இப்பொழுது உண்மையாகி உள்ளன. இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான The University of Sheffield இதை ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு அணு உருவாவது, அந்த உயிர் ஜீவன் உருவாக்கப்பட்டது இறைவனால் அல்லது இயற்கையால். அதன்பிறகு அது இனவிருத்தி செய்கிறது. ஒரு ஜீவன் உருவானதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம் நடந்து இருக்கிறது.

Comments