வானரம் ஆயிரம்


புழக்கத்தில் இல்லையென்றால்
சொந்தப்பெயரே மறந்திடும்;

எழுத்துக்கள் என்னவாகுமோ என
எந்தன் மனமும் நொந்திடும்;

தலைப்புக்கள் கிடைக்காது என
காகிதமும் கோலும் தடுமாறிடும்;

தலைப்பூக்களுடன் என்னவளின் முகம்
எடுத்துக்கொள் என வந்துவிடும்...

பழகி சிரித்து பிரிந்து வருந்தி அழுதாலும்,
காதலினால் வந்த வடுக்கள் ஆயிரம்...!

பிறந்து தவழ்ந்து எழுந்து நிமிர்ந்து நடந்தாலும்,
மனித மனதில் இன்றும் உள்ளது வானரம் ஆயிரம்...!

Comments